விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர்
பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் இஸ்ரோவில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற முன்னாள் அசோசியேட் டைரக்டர் கல்பனா அரவிந்த், சந்திராயன் இரண்டு தோல்விக்கு காரணம் முதன்முறையாக அதன் வேகத்தை கணக்கிட முடியவில்லை. ஒரே திட்டத்தோடு தான் நாங்கள் வேலை செய்தோம் இரண்டாவது திட்டம் என எதுவும் இல்லை. எதற்குமே ஒரே திட்டத்தோடு இருக்காதீர்கள் இரண்டு திட்டத்தை வைத்துக் கொள்ளுங்கள். ஒரு திட்டம் தோல்வியடைந்தால் மனம் தளர்ந்து விடக்கூடாது உடனடியாக இரண்டாவது திட்டத்திற்கு சென்று விட வேண்டும். இஸ்ரோவில் வேலைக்கு சேர்வதற்கு தற்போது போட்டி அதிகமாக உள்ளது. இஸ்ரோவில் சேர்வதற்கு எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல் கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட படிப்புகள் படிக்கலாம். ஒரு சில விஷயங்கள் கிடைக்கும் தற்போது உள்ள மாணவர்களுக்கு வாய்ப்பாடு கூட தெரியவில்லை. சந்திரயான் 2 தோல்வியில் தான் நாங்கள் பாடங்களை கற்றுக் கொண்டோம் சந்திரயான் மூன்று திட்டத்தின் போது நாங்கள் செல்லும்போதே கையில் சாக்லேட் கொண்டு சென்றோம் அந்த அளவுக்கு எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. தோல்வியில் தான் பாடங்களை கற்றுக் கொள்ள முடியும் மாணவர்களும் பெற்றோர்களும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உள்ளது என பேசினார்.