பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் குறித்து கள ஆய்வுக் கூட்டம்

69பார்த்தது
திருச்சுழி நகர்ப் பகுதியில், விருதுநகர் கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளருமான, முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மைக்கேல் ராயப்பன் தலைமையிலும், மண்டல பொறுப்பாளரும், கிழக்கு மாவட்ட கழக அவைத் தலைவருமான ஜெயபெருமாள் முன்னிலையிலும் அதிமுக பூத் கமிட்டி கள ஆய்வு நடைபெற்றது. திருச்சுழி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் முனியாண்டி ஏற்பாட்டில்,
திருச்சுழி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட திருச்சுழி, பள்ளிமடம், மாங்குளம், கோணப்பனேந்தல் உள்ளிட்ட 13 பூத் களுக்கு அதிமுக பூத் கமிட்டிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளை விருதுநகர் கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மைக்கேல் ராயப்பன் மற்றும் மண்டல பூத் கமிட்டி பொறுப்பாளர் ஜெயபெருமாள் ஆகியோர் நேரில் சந்தித்து கள ஆய்வு மேற்கொண்டனர். அதிமுக பூத் கமிட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் பணிகள் குறித்து பூத் கமிட்டி பொறுப்பாளர் மைக்கேல் ராயப்பன், மண்டல பொறுப்பாளர் ஜெயபெருமாள் ஆகியோர் விரிவாக எடுத்துரைத்தனர். இந்த கள ஆய்வின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் மற்றும் திருச்சுழி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் முத்துராமலிங்கம், மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் கருப்பசாமி மற்றும் அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், திருச்சுழி தெற்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி