விருதுநகர் மாவட்டத்தில் வேளாண் பணிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண்மைப்; பொறியியல் துறை இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மானாவாரி, கிணறு மற்றும் குளத்துப் பாசன விவசாயத்தில், நில உழவுப் பணியிலிருந்து அறுவடை பணிகள் வரை இயந்திரங்களைப் பயன்படுத்தி பணிகளை மேற்கொள்ள ‘வேளாண்மை இயந்திர மயமாக்கல்” பணிகளை வேளாண்மைப் பொறியியல் துறை மேற்கொண்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையில் உழுவை இயந்திரம் 7 எண்களும், மண் தள்ளும் இயந்திரம் 2 எண்களும், ஜெசிபி இயந்திரம் 2 எண்களும், பொக்லைன் இயந்திரம் 1 எண்ணும் மற்றும் தேங்காய் பறிக்கும் இயந்திரம் 1 எண்ணும் அரசு நிர்ணயம் செய்த மிகக் குறைந்த வாடகையில் வாடகைக்கு விடப்பட்டு வருகின்றது.