*விருதுநகரில் நடை பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் தடையை மீறி நடை பயணம் மேற்கொள்ள முயன்ற காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் சங்கத்தினர் சாலையில் படுத்தும் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முயன்ற நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்*
விருதுநகரில் காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக கவுசிக மகாநதியில் கழிவுநீர் கலப்பு, தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும், குல்லூர்சந்தை, கோல்வார்பட்டி, இருக்கன்குடி அணைகளை புனரமைக்க வலியுறுத்தி 2 நாள் நடை பயணத்திற்கு போலீசார் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இன்று தடையை மீறி நடை பயணத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகள் சங்கத்தினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து விருதுநகர் சிவகாசி சாலையில் படுத்தும் அமர்ந்தும் சிறிது நேரம் தர்ணாவில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து வாகனத்தில் ஏற்றி தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
சாலை மறியல் மற்றும் விவசாயிகளின் தர்ணா போராட்டத்தினால் விருதுநகர் சிவகாசி சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.