*விருதுநகரில் பாலிடெக்னிக்கில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம். - மாணவர்கள் கயிறு இழுத்தும், உறி அடித்தும் மாணவிகள் கோலமிட்டும் உற்சாகம். *
விருதுநகர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் கல்லூரி மாணவிகளால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
உழவருக்கு நன்றி சொல்லக் கூடியதாகவும் உழவுக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய இயற்கைக்கும் நன்றி சொல்லும் வகையில் ஆண்டுதோறும் தைத் திங்கள் முதல் நாள் தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் கொண்டாட்டப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு தைத்திருநாள் வருகிற 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
தொடர் விடுமுறை என்பதால்
அரசு அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகளில் பொங்கல் திருவிழா களை கட்டத் துவங்கியுள்ளது.
விருதுநகர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் கல்லூரி மாணவ மாணவியரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தமிழரின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பறைசாற்றும் விதமாக பட்டாடை உடுத்தியும், கோலமிட்டும்
பொங்கலிட்டும் 'பொங்கலோ பொங்கல்' என குலவை இட்டும் சமத்துவ பொங்கல் திருநாளை கோலாகலமாக கொண்டாடினர்.
மேலும் கயிறு இழுத்தல், கயிறு ஏறுதல், உறிஅடித்தல், கோலமிடுதல் போன்ற விளையாட்டுகளும் நடைபெற்றன