மூதிய தம்பதியினர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி

52பார்த்தது
விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் பகுதியை சார்ந்த அனந்தப்பன்( 62) இவருடைய மனைவி சாந்தா தேவி( 60 )அனந்தப்பன் கொத்தனார் வேலை செய்து வந்த நிலையில், தற்போது வீட்டில் இருந்து வருவதாகவும் இவர்கள் அதே பகுதியில் தங்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் 60 சென்ட் நிலம் இருப்பதாகவும், இதில் 60 சென்ட் நிலத்தை கடந்த 2007 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சார்ந்த கிராம உதவியாளராக பணிபுரியும் ரவி என்பவருக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

அதை தொடர்ந்து தங்கள் பேரில் உள்ள மீதமுள்ள ஒரு சென்ட் நிலத்தை கிராம உதவியாளர் ரவி முறைகேடாக அவருடைய பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொண்டதாகவும் இதனால் வேறு யாரு ம் தங்களது நிலத்தை வாங்க முடியாத நிலை இருப்பதாகவும்

இது குறித்து பல இடங்களில் மனு அளித்தும் கிராம உதவியாளராக பணிபுரியும் ரவி தனது செல்வாக்கை பயன்படுத்தி தங்களை மிரட்டி வருவதாகவும் தங்கள் நிலத்தை தங்களுக்கு மீட்டு தர வேண்டும் எனக் கூறி, வயதான தம்பதியினர் இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தனர்

அப்போது அங்கு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணைக்காக சூலக்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி