கார்விபத்தில் எட்டு பேர் காயம்

56பார்த்தது
விருதுநகர் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் காயமடைந்த நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்.


ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனது மனைவி, மகன், மருமகள் மற்றும் பேரன் பேத்தி உள்ளிட்ட 9 பேருடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றுவிட்டு திருப்பதிக்கு காரில் சென்றுள்ளனர்.
விருதுநகர் அருகே இனாம்ரெட்டியாபட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பால தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த 10 வயது, 8 வயது சிறுவர் சிறுமியர் உள்ளிட்ட 9 பேர் காயமடைந்தனர். சம்பவம் அறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பிரகாஷின் மனைவி ஆல்யாராணி (வயது 65), சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 8 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி