விருதுநகர் அருகே செங்குன்றாபுரம் கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்டத்திற்காக தமிழ்நாட்டிற்கு நிதியை ஒதுக்காத மத்தியில் ஆளும் ஒன்றிய பிஜேபி அரசைக் கண்டித்து திமுக சார்பில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. ஆர். ஆர். சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள்,
தமிழ்நாட்டில் ஹிந்தியை கற்றால் தான் கல்விக்கான ரூ 3000 கோடி நிதியை ஒதுக்குவேன் என்று கூறிய ஒன்றிய அரசிடம் நம்முடைய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தமிழக மாணவர்களின் மேல் மேலும் ஒரு சுமையை ஏற்ற நான் விரும்பவில்லை என்று கூறி அந்த நிதியை வேண்டாம் என்று கூறியவர் நம்முடைய முதல்வர் என்றும்,
மேலும் மத்தியில் பிஜேபி அரசும் ஆளும் மாநிலங்களில் நூறுநாள் வேலைத் திட்டத்திற்கு ஒன்றிய அரசு இதுவரை நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது என்றும் ஆனால் அரசைக் கண்டித்து தமிழகநிதியமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடந்த இந்த ஆர்பாட்டத்தில் 100 நாள் வேலைதிட்டத்தில் பணிபுரியும் 300 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்