பாண்டியன்நகரில் கலைஞரின் பிறந்த நாளை கொண்டாடிய திமுகவினர்

74பார்த்தது
*விருதுநகரில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 101 வது பிறந்த தினத்தை முன்னிட்டு ரோசல்பட்டி பஞ்சாயத்தில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தமிழரசி ஜெயமுருகன் தலைமையில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி. *

திமுகவின் முன்னால் முதலமைச்சரும் டாக்டர் கலைஞர் அவர்களின் 101 வது பிறந்த தினத்தை முன்னிட்டு முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள திமுக சார்பாகவும் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் அவரது திரு உருவப் படத்திற்கு மாலை வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர்

அதனை முன்னிட்டு இன்று விருதுநகர் ரோசப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாண்டியன் நகரில் அமைந்துள்ள தேவர் சிலை முன்பு திமுக நிர்வாகியும் ரோசல்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான தமிழரசி ஜெயமுருகன் தலைமையில் நடைபெற்ற விழாவில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. ஆர். ஆர் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்

மேலும் இந்த நிகழ்வின் போது திமுக ஒன்றிய கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி