விருதுநகர் மாவட்டம்
சத்துணவு உண்ணும் பள்ளி மாணவ /மாணவியர்களுக்கு விலையில்லா இணை சீருடைகளை மாவட்ட வருவாய் அலுவலர் இரா. ராஜேந்திரன் அவர்கள் வழங்கினார்.
---
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், ஆவுடையாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று(29. 07. 2024) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் சத்துணவு உண்ணும் பள்ளி மாணவ /மாணவியர்களுக்கு விலையில்லா இணை சீருடைகளை மாவட்ட வருவாய் அலுவலர் இரா. ராஜேந்திரன் அவர்கள் வழங்கினார்.
தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1474 பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் 91, 096 மாணவர்களுக்கு விலையில்லா சீருடை வழங்கப்படவுள்ளது.
சமூக நலத்துறையின் மூலம் மாவட்டத்தில் 6 தையல் கூட்டுறவு அமைப்பில் உள்ள மகளிர்கள் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று ஒவ்வொரு குழந்தைக்கும் அளவெடுத்து, தைத்து பின்னர் நேரடியாக குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.
அதன்படி இன்று விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், ஆவுடையாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சத்துணவு உண்ணும் 143 பள்ளி மாணவ /மாணவியர்களுக்கு விலையில்லா இணை சீருடைகளை மாவட்ட வருவாய் அலுவலர் இரா. ராஜேந்திரன் அவர்கள் வழங்கினார்.