கல்லூரியில் சேர மாணவிகளுக்கு உதவிய மாவட்ட ஆட்சியர்

85பார்த்தது
கல்லூரியில் சேர மாணவிகளுக்கு உதவிய மாவட்ட ஆட்சியர்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செங்குளம் கிராமத்தை சேர்ந்த 5 மாணவிகள் கல்லூரியில் சேராமல் இருப்பதை கண்டறிந்து, அவர்களின் பெற்றோர்களை அழைத்து பேசி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அருகில் இருக்கக்கூடிய தனியார் கல்லூரியில் சேர்த்து அதற்குரிய கட்டணத்தை விருதுநகர் கல்வி அறக்கட்டளை வாயிலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அந்த மாணவிகள் அனைவரும் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் ஒரே கல்லூரியில் பி. எஸ். சி. வேதியியல் பாடப்பிரிவு எடுத்துள்ளனர். அந்தவகையில் 13 மாணவர்களுக்கு ரூ. 60,261 மதிப்பில் உயர்கல்விக்கான கல்விக்கட்டணங்களை விருதுநகர் கல்வி அறக்கட்டளையிலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி