விருதுநகர் அல்லம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தனுஷ் என்பவர் கைது.
விருதுநகர் கிழக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கார்த்திக். இவர் விருதுநகர் அல்லம்பட்டி எம்ஜிஆர் நகர் அனுமான் நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது, அங்கு இருந்த தனுஷ் என்பவரை அழைத்து சோதனை செய்ததில் அவர் விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்களை பதிக்க வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்த 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.