விருதுநகர் தேசபந்து மைதானத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வெயிலுகுந்த அம்மன் கோவிலில் வைகாசி மாத பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது நேற்று பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்ற நிலையில் இன்று அக்னி சட்டி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது சுமார் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி சட்டியை எடுத்து கடனை செலுத்தினர் நாளை தேரோட்டம் நடைபெற உள்ளது