மீனாம்பிகைபங்களா வழியாக பேருந்துகளை இயக்க கோரி ஆர்ப்பாட்டம்

63பார்த்தது
*விருதுநகரில் மீனாம்பிகை பங்களா வழியாக பேருந்துகளை இயக்க கோரி 100க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். *

விருதுநகரில் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மீனாம்பிகை பங்களா வழியாக பேருந்துகளை இயக்க கோரி பொதுமக்கள் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

விருதுநகரில் 32 ஆண்டுகளுக்குப் பின் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் புதிய பேருந்து நிலையம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. இதன்படி,
புறநகர் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும் நகர பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திலிருந்தும் புறப்பட்டு செல்கின்றன.
ஆனால் சிவகாசி மதுரை புறநகர் பேருந்துகள் மற்றும் மதுரை சிவகாசி பேருந்துகள் மதுரை- கோவில்பட்டி பேருந்துகள் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மீனாம்பிகை பங்களா வழியாக இயக்க வலியுறுத்தி
விருதுநகர் மக்கள் நல கூட்டமைப்பு சார்பில்100க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் மீனாம்பிகை பங்களா மூளிப்பட்டி அரண்மனை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
விருதுநகர்
தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது மீனாம்பிகை பங்களா வழியாக பேருந்துகளை இயக்க கோரி முழக்கங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி