ஆதித்தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

71பார்த்தது
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டுமென ஆதித்தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் சக்கையன் விருதுநகரில் பேட்டி


சென்னை பெரம்பூரில் கடந்த ஐந்தாம் தேதி இரவு பகுஜன் ஜமாத் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இந்த படுகொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த படுகொலையில் சம்மந்தப்பட்ட 8 பேரை தமிழ்நாடு காவல்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் இந்த சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்

இந்த நிலையில் இன்று விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு ஆதித்தமிழர் கட்சியன் சார்பில் நிறுவ தலைவர் கு. ஜக்கையன் தலைமையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும்,

மேலும்
அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் பட்டியலின இளைஞ் அழகேந்திரனின் ஆவணக் கொலையை கண்டித்தும்,


தமிழக அரசுக்கு மற்றும் காவல்துறைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்பாட்டத்திற்கு முன்பு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் அவர்களின் திரு உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி