அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கோரிக்கைகளை வலியுறுத்தி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வலியுறுத்தி
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்
கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும், தேவையான மருத்துவ உபகரணங்கள் தாமதமின்றி வழங்க வேண்டும். அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டும். அறிவிக்கப்பட்ட பல் மருத்துவக் கல்லூரியை உடனடியாக துவக்க வேண்டும், B. Sc நர்சிங், பாரா மெடிக்கல் கல்லூரிகளை துவக்க வேண்டும்.
ஆய்வகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், டிஜிட்டல் எக்ஸ்ரே, M. R. I. ஸ்கேன் மையத்தை புதிய ஒருங்கிணைந்த மருத்துவமனை வளாகத்தில் துவக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கட்சியின் விருநகர் நகரச் செயலாளர்
ஜெயபாரத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது மருத்துவமனை கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.