ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு நடைபெற்றது

75பார்த்தது
விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத்தலைவர் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர் தலைமையில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர் செயலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணிஸ்ரீகுமார் இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி மற்றும்
சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு திட்டங்கள் மற்றும் அதன் நோக்கம் சரியாக நிறைவேற்றப்படுவதை மாவட்ட அளவில் கண்காணித்து நிறைவேற்றுவது மற்றும் ஆலோசனைகள் வழங்குவது மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் (DISHA) பணியாகும். மத்திய அரசின் திட்டப்பணிகளை செயல்படுத்தும்போது ஏற்படும் இடர்களை சரியான நேரத்தில் களைந்து அதற்கான தீர்வுகளை கண்டு பணிகளை சிறப்பாக நிறைவேற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு வழிகாட்டியாக இந்தக்குழு செயல்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி