மாநில அளவிலான போட்டியில் வெற்றி ஆட்சியரிடம் வாழ்த்து

73பார்த்தது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று(31. 07. 2024) திண்டுக்கலில் உள்ள P. S. N. A பொறியியல் கல்லூரியில் வைத்து கடந்த 26. 07. 2024 மற்றும் 27. 07. 2024 ஆகிய 2 நாட்கள் மாநில அளவிலான (State level) பள்ளி மாணவர்களுக்கான பால்பேட்மிட்டன் போட்டிகள் நடைபெற்றது. தமிழகத்தைச் சார்ந்த பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 48 பள்ளிகளைச் சார்ந்த மாணவர் அணி பங்கு பெற்றனர். இதில் பங்கேற்று வெற்றிக்கோப்பையையும், ரூ. 15000/- ரொக்கப் பரிசினையும் பெற்று முதலிடம் பெற்ற வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த மாணவர் அணியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன், இ. ஆ. ப. , அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி