விருதுநகர் மாணிக்கம் நகரை சார்ந்தவர் கண்ணன் இவர் அதே பகுதியில் உள்ள ஆயில் மில்லில் வாட்ச்மேனாக பணிபுரிந்து வருகிறார் அங்குள்ள ஆடுகள் மாடுகள் நாய்களை பராமரிக்கும் பணிகளையும் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கிருந்த கன்று குட்டி பாலை குடித்து விட்டதாக சண்முகம் கண்ணனை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது இது தொடர்பாக கண்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.