ஆய்வாளர் மீது எஸ்பி அலுவலகத்தில் புகார்

77பார்த்தது
விருதுநகர் அருகே
ஆர் ஆர் நகர் பகுதியில் ஆவின் பாலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது இதன் முகவராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த பாலமுருகன் என்பவர் உள்ளார்

இந்த கடையில் கடந்த தீபாவளிக்கு வச்சக்ககாரப்பட்டி காவல் நிலைய ஆய்வாளருக்கு பணம் கொடுக்குமாறு விருதுநகரைச் சேர்ந்த சில குவாரி உரிமையாளர்கள் கவரில் பணத்தை வைத்து ஆவின் பாலகத்தில் கொடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது

அந்த பணத்தை வச்சகாரப்பட்டி காவல் ஆய்வாளர் பொன் மீனா பெற்றுக் கொண்டதாகவும், கூறப்படுகிறது.

சமீபத்தில் இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட ஆவின் பாலகம் உரிமையாளர் பாலமுருகன் வேலை யாட்களிடம் இதுபோன்று யாரும் தங்கள் கடையில் பணம் கொடுத்தால் பெற்று தர மாட்டேன் என தெரிவிக்க சொன்னதாகவும், மேலும்ஆவின் பாலகம் முகவர் பாலமுருகன் இதை மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதை மனதில் வைத்துக் கொண்ட காவல்நிலைய ஆய்வாளர் பொன் மீனா அந்த கடையை அங்கிருந்து அகற்றுவதற்கு முயற்சிப்பதாகவும் , இது சம்மந்தமாக எனக்கு மிரட்டல் விடுத்து வருவதாகவும் கூறி இது சம்மந்தமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி