விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லூரியில் இன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கான மாநில அளவிலான மாதிரி தேர்வு நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என். ஓ. சுகபுத்ரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து, ஆலோசனைகளை வழங்கி உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார். இந்த மாதிரி தேர்வில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.