ஊராட்சிக்குட்பட்ட வளர்ச்சித் திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு

61பார்த்தது
விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேப்பிலைப்பட்டி ஊராட்சி ஜக்கம்மாள்புரம்; கிராமத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 9. 77 இலட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக்கடை கட்டப்பட்டுள்ளதையும்,

மேலும், சந்தையூர் ஊராட்சி குலசேகரபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 5 இலட்சம் மதிப்பில் பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டு வருவதையும், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ. 2. 40 இலட்சம் மதிப்பில் அரசு மானியத்தில் வீடு கட்டப்பட்டு வருவதையும்,

அதனை தொடர்ந்து, கோல்வார்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 9. 99 இலட்சம் மதிப்பில் புதிய ஊரணி அமைக்கப்பட்டு, குளம் தூர்வாரபட்டு வரும் பணிகளையும்,

பின்னர், நல்லமநாயக்கன்பட்டி ஊராட்சியில் ராஷ்ட்ரிய கிராம் ஸ்வராஜ் அபியான் (RGSA) திட்டத்தின் கீழ் ரூ. 5 இலட்சம் மதிப்பில் ஒருங்கிணைப்புக்குழு கட்டடம் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென தொடர்புடைய அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி