விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், 74 அரசுப்பள்ளிகளை சேர்ந்த தலைமையாசிரியர்களும், 51 அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த தலைமையாசிரியர்களும், 65 தனியார் பள்ளிகளை சேர்ந்த தலைமையாசிரியர்களும் என மொத்தம் 190 பள்ளிகளை சேர்ந்த தலைமையாசிரியர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சான்றிதழ்களை வழங்கி, பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்தார்.