சிஜடியூ போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தின் பேரவை கூட்டம்

81பார்த்தது
விருதுநகரில் சிஜடியூ அரசுப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தின் 27வது ஆண்டுப் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார்
மின்சாரம், ரேசன் பொருட்களுக்கு வழங்குவது போல் மக்கள் சேவை செய்யும் போக்குவரத்து துறைக்கு
பட்ஜெட்டில் நிதியை ஒதுக்க வேண்டும் என்றார்.

விருதுநகரில் சிஜடியூ அரசுப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தின் 27வது ஆண்டுப் பேரவை நடைபெற்றது.
இதில் போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகையை அரசு வழங்கிட வேண்டும். தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுப்பதை கைவிட வேண்டும். போக்குவரத்து கழகங்களில் சுமார் 25, 000 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்நிலையில் 25சதம் மட்டும் காலிப்பணியிடங்களைப் பூர்த்தி செய்ய மட்டுமே அரசாணை வெளிடப்பட்டுள்ளது. எனவே முழுமையாக காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். ஊதிய ஒப்பந்தத்தை உடனே பேசி முடிக்க வேண்டும்.
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 105 மாதங்களாக மறுக்கப்பட்டு உள்ளது. அதை உடனே வழங்க வேண்டும். தொழிலாளர் நலனுக்கு எதிரான 321 முதல் 328 வரையிலான அரசாணைகளை ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி