சாம்சங் நிறுவனத்தில் உரிமை கோரி சிஐடியு மறியல் போராட்டம்

83பார்த்தது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பன்னாட்டு நிறுவனமான சாம்சிங் நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சங்கம் வைக்க அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே, சங்கம் வைக்கும் உரிமை வேண்டுமென வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 20 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், தொழிலாளர் நலத்துறையும் தமிழக அரசும், சாம்சங் தொழிலாளர்களுக்கு சங்கம் வைக்கும் உரிமையை வழங்காமல் மௌனம் காத்து வருகிறது.
எனவே, இதனைக் கண்டித்தும், சங்கம் வைக்கும் உரிமையை உடனடியாக வழங்கிட வலியுறுத்தியும், சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் சிஐடியு தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எம். மகாலட்சுமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி. என். தேவா மறியலை துவக்கி வைத்தார். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 12 பெண்கள் உட்பட 134 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இதில், மாவட்ட நிர்வாகிகள் எம். அசோகன், ஜி. வேலுச்சாமி, ஆர். பாலசுப்பிரமணியன், பி. ராமர், எம். சாராள், எம். சி. பாண்டியன், கே. விஜயகுமார், கே. முருகன், எம். கார்மேகம், எம். வெள்ளைத்துரை ஆகியோர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி