முன் விரோதம் காரணமாக தாக்கியவர் மீது வழக்குப் பதிவு

59பார்த்தது
பெரிய வாடி ஊரில் முன்பக காரணமாக ஜெயக்குமார் என்பவரை தாக்கிய இருவர் மீது வழக்கு பதிவு

விருதுநகர் மாவட்டம் முதலிப்பட்டி அருகே பெரிய வாடி ஒரு பகுதியைச் சார்ந்தவர் ஜெயக்குமார் இவர் விறகு வெட்டும் தொழில் செய்து வருவதாகவும் அதே பகுதியை சார்ந்த பாரதிராஜா என்பவரும் விறகு வெட்டும் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது இருவருக்கும் இடையே தொழில் பகை காரணமாக முன்பிரோதம் ஏற்பட்டுள்ளது. இதை மனது வைத்துக்கொண்டு பாரதிராஜா தனது நண்பர் ஈஸ்வரனை அழைத்துக் கொண்டு சென்று ஜெயக்குமாரை தாக்கி கொலை மிரட்டல் எடுத்துள்ளார் இதில் காயமடைந்த ஜெயக்குமார் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி வச்ச காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் அடிப்படையில் வச்சக் காரப்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி