அமித்ஷா உருவ பொம்மை எரித்த 14 பேர் மீது வழக்கு பதிவு

51பார்த்தது
பழைய பேருந்து நிலையம் முன்பு மத்திய அமைச்சர் அமித்ஷா உருவ பொம்மை எரித்த தமிழ் புலிகள் கட்சியைச் சார்ந்த 14 பேர் மீது வழக்கு பதிவு

விருதுநகர் மேற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முருகேசன் இவர் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் நுழைவு வாயிலில் பணியில் இருந்த பொழுது அங்கு தமிழ் புலிகள் கட்சியைச் சார்ந்தவர்கள் சட்ட விரோதமாக ஒன்று கூடி மத்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா டாக்டர் அம்பேத்கர் பற்றிய அவதூறாக பேசியதை கண்டித்து அவருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்பொழுது எதிர்பாராத விதமாக அமித்ஷாவின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்து மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக தமிழ் புலிகள் கட்சியின் மாநில பொருளாளர் விடியல் வீர பெருமாள் மற்றும் மாவட்ட செயலாளர் பிரபாகரன் உட்பட 14 பேர் மீது மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி