விருதுநகர் சரஸ்வதி கிராண்;ட் திருமண மண்டபத்தில் இன்று தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்களை சந்தைப்படுத்தும் வர்த்தக நிபுணர்கள் சந்திப்பு நிகழச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
விருதுநகர் மாவட்டத்தில், ஏறத்தாழ 1, 20, 000 பெண்கள் மகளிர் சுயஉதவிக்குழுக்களில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதில் 80, 000 பெண்கள் ஏதாவது ஒரு வகையில் சிறு தொழிலோ அல்லது வருமானம் ஈட்டக்கூடிய ஒரு பணியிலே இருக்கக்கூடிய ஒரு சூழலை நாம் பார்க்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் சுமார் ரூ. 9000 கோடி கடனாக பெற்று இருக்கிறார்கள்.
இதள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் கடனை பெற்று சிறு தொழில்களை செய்வதற்கும் அதிகமான தொழில் மையங்களை உருவாக்கி கொள்ளமுடியும். தினசரி பயன்பாட்டிற்காக ஒவ்வொரு நாட்களும் நாம் செலவழித்து வாங்ககூடிய பொருட்களையும், தரமான பொருட்களையும் மகளிர் சுய உதவிக்குழுக்களே உற்பத்தி செய்து வருகிறது. தரமான மற்றும் ஆரோக்கியமான உணவுகள்,
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், கொள்முதலாளர்களுக்கும் முதற்கட்டமாக 28 புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.