விருதுநகர் மாவட்டத்தில் கடந்த மூன்று மாத நிலவரப்படி 59 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்இவர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினர். வைரஸ், டெங்கு காய்ச்சல் அதிகரிக்காமல் இருக்கவும், சுகாதாரம், நோய்த் தடுப்பு பணிகளை கண்காணிக்க மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக இணை இயக்குநர் கிருஷ்ணராஜ் என்பவரை தமிழக அரசு நியமித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டெங்குவால் பலர் இறந்தனர். இதன் பின் மாவட்டத்தில் தீவிர டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொண்டதால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்தது. தற்போது மாவட்டத்தில் மழை பெய்ததால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்தது. கொசுக்களால் மனிதருக்கு பரவும் வைரஸ், பாக்டீரியா மூலம் நோய் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.
இதனால் குழந்தைகள், பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். இப்படி பாதிக்கப்படுவர்களுக்கு முதலில் உடம்பு, தொண்டையில் வலி ஏற்படுகிறது. சளி, இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்டவற்றுடன் காய்ச்சல் ஏற்படுகிறது. இதில் பலரும் டெங்குவாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் ஆகஸ்ட் 20 , செப்.
33, அக். 6 வரை 6 பேர் என மொத்தம் 59 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்டோர் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.