விருதுநகர் அருகே 3ம் வகுப்பு பயிலும் பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வங்கி மேலாளர் போக்சோ சட்டத்தில் கைது.
விருதுநகர் அருகே குமாரலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ண நாராயணன். இவர் தனியார் ஏடிஎம்மில் பணம் நிரப்பும் பணியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 27 ஆம் தேதி குமாரலிங்கபுரம் பகுதியில் விளையாடி கொண்டிருந்த 3ம் வகுப்பு பயிலும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் நிலைகுலைந்த சிறுமி தமக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து அவருடைய பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கிருஷ்ண நாராயணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.