கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

56பார்த்தது
விருதுநகர் மண்டல இணை பதிவாளர் செந்தில்குமார் செய்திக்குறிப்பு: சாத்துாரில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் முழுநேர கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு www. tncu. tn. gov. in என்ற இணையத்தில் ஜூலை 31 க்குள் விண்ணப்பித்து, கட்டணம் ரூ. 100 இணையதளம் மூலம் செலுத்த வேண்டும். மேலும் பதிவேற்றிய விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அசல், நகல் சான்றுகளை மேலாண்மை நிலையத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். பயிற்சி கட்டணம் ரூ. 18 ஆயிரத்து 750 இணைய தளம் மூலம் மேலாண்மை நிலையத்தில் உள்ள paytmல் ஆக. 14 க்குள் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை நிலையம், சிவசக்தி திருமண மண்டபம், பி. ஆர். சி. , செட் எதிர்புறம், சாத்துார் - 626 203 என்ற முகவரியில் நேரிலும், 04562 - 260 293, 88071 59088 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம், என்றார்.

தொடர்புடைய செய்தி