தமிழக அரசை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

73பார்த்தது
*மே மாதம் ஒரு மாதம் கோடை விடுமுறை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்க மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்*


விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட குழு சார்பில் மாவட்டத் தலைவர் எஸ்தர் ராணி தலைமையில் உள்ளூர் பணியிட மாறுதல்கள் வழங்காமல் அரசனைக்கு எதிராக காலி பணியிடங்களை நிரப்புவதை கண்டித்தும் மாவட்டத்தில் காலியாக உள்ள அனைத்து காலி பணி இடங்களையும் நிரப்பாமல் குறிப்பிட்ட இடங்களை மட்டும் காலிப்பணியிடங்களாக அறிவித்து நிரப்பும் சர்வாதிகார போக்கை கண்டித்தும் மே மாத ஒரு மாதம் கோடை விடுமுறை வழங்க வேண்டும் உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி