ஆண்டாள் வேடமணிந்து 30 நிமிடம் 30நொடிகள் திருப்பாவைபாடி சாதனை

83பார்த்தது
*விருதுநகரில் மார்கழி மாதம் ஆண்டாளின் சிறப்புகளை போற்றும் விதமாக I51 மாணவ, மாணவிகள் ஆண்டாள் வேடமணிந்து தொடர்ந்து 30 நிமிடம் 30 நொடிகள் திருப்பாவை பாடிக் கொண்டு பரதநாட்டியம் ஆடி உலக சாதனை. *

விருதுநகர் தனியார் பள்ளியில் நடேசர் நாட்டிய பள்ளி சார்பாக ஸ்ரீவில்லிபுத்தூரில் வீற்றிருக்கும் ஆண்டாளின் சிறப்புகளை போற்றும் வகையிலும், மார்கழி மாதத்தின் சிறப்புகள் மற்றும் பரதநாட்டியத்தின் சிறப்புகளையும் இளம் தலைமுறையினருக்கும் கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,

இன்று விருதுநகர் நடேசர் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் இதர நடனப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி ஆகிய பகுதிகளிலிருந்து. வசிப்பவர்கள்

11 மாணவ, மாணவியர்கள் 30 திருப்பாவை பாடலை பாட அதற்கேற்றார்போல் 140 பள்ளி , மாணவிகள் ஆண்டாள் வேடமணிந்து மொத்தம் 151 மாணவ, மாணவியர்கள் தொடர்ந்து 30நிமிடம் 30 நொடிகள் பரதநாட்டியம் ஆடி யுவின் இண்டர்நேசனல் ரெக்கார்ட்ஸ் மற்றும் அவார்ட்ஸ் உலகசாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர். இந்த சாதனைக்கான பாராட்டு சான்றிதழை நடுவர் யுவராஜ் வழங்கினார்.

இதில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகள் திருப்பாவையை பாடியவாறு பரதநாட்டியம் ஆடியது பார்வையாளர்களின் மனதை நெகிழ்ச்சியடையச் செய்தது குறிப்பிடத்தக்கது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி