விருதுநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது, மற்றும் செயல் வீரர் மற்றும் வீராங்கனைகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சரும் செயலாளருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி மற்றும் அதிமுக மகளிர் அணி மாநில இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி ஆகியோர் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய கே. டி. இராஜேந்திர பாலாஜி தற்போது தொலைக்காட்சி விவாதங்களில் அதிமுக பற்றி அதிகம் பேசப்படுவதாகவும் தமிழகத்தில் அதிமுக குறித்து மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் போதெல்லாம் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றார். திமுக இனி ஒரு போதும் ஆட்சிக்கு வர முடியாது எனவும் 2011ம் ஆண்டு ஏற்பட்ட நிலைமை தான் அடுத்து வரும் தேர்தலில் திமுகவுக்கு ஏற்படும் என்றார். அதிமுக வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அதிமுகவின் இலக்கு என்பது நமது அரசியல் எதிரியான திமுகவை ஆட்சியில் இருந்து விரட்ட வேண்டும் என்றால் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். திமுகவில் நடைபெறுவது வாரிசு அரசியல் எனவும் ஜமீன்தார் அரசியல் எனவும் விமர்சனம் செய்தார்.