திமுக அரசை கண்டித்து மாநாட்டிற்கு சென்ற அமமுக கட்சியினர்

561பார்த்தது
வாக்கு மறந்த திமுக அரசை கண்டித்து மாபெரும் மாநாட்டிற்கு 150 க்கும் மேற்பட்ட வாகனங்களில் திரளாகச் சென்ற அமமுக கட்சியினர்.


கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது 250 க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிய திமுக ஆட்சி பிடித்த உடன் தான் அளித்த வாக்குறுதிகளை அனைத்தும் மறந்து செயலற்ற திமுக அரசாக ஆட்சி நடத்தும் திமுகவையும் அதன் ஆட்சியையும் கண்டித்து நெல்லையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் டிடிவி தினகரன் தலைமையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த பொதுக் கூட்டத்திற்கு விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் பயில்வான் ஜே எஸ் சந்தோஷ் குமார் தலைமையில் 150 க்கும் மேற்பட்ட வாகனங்களில் சிவகாசி விருதுநகர் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் ஏராளமானோர் பேரணியாக சென்றனர். தேசிய நெடுஞ்சாலையில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தொண்டர்களின் வாகனங்கள் அணிவகுத்து சென்றது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி