விருதுநகர்: உலக காசநோய் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கருத்தரங்கம்

61பார்த்தது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. காசநோயை ஒழிக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தவும், சுகாதாரம், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் காசநோய் ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றிய பொது மக்களின் விழிப்புணர்வை அதிகரிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24-ஆம் தேதி உலகக் காசநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

 காசநோய் என்பது ஒரு தொற்றக்கூடிய நுரையீரல் சார்ந்த பிரச்சினை. இந்தியாவில் 40, 50 ஆண்டுகளுக்கு முன்பாக காசநோய் என்பது மிகவும் தீவிரமான ஒரு நோயாகவும், அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய நோயாகவும் இருந்தது. இன்றைக்கும் 1 இலட்சத்திற்கு 200-க்கும் மேலாக நோயாளிகள் இருக்கக்கூடிய விகிதம் இருக்கிறது. 

எனவே நமது மக்கள் தொகைக்கேற்ப, நோய் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் எத்தனை சதவீதம் என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் அவர்களை கண்டறிய வேண்டியது மிக முக்கியமானது. ஏனென்றால், நோய் தாக்கம் உள்ளவர்களை ஆரம்ப நிலையில் கண்டறிந்து, அவர்களுக்கு அடுத்த கட்ட சிகிச்சைகள் வழங்குவதன் மூலம் தான் அவர்களிடமிருந்து அந்த நோய் மற்றவர்களுக்கு பரவக்கூடிய சங்கிலியை குறைக்க முடியும்.

தொடர்புடைய செய்தி