ஆமத்தூர் விருதுநகர் சாலையில் அனுமதி இன்றி பட்டாசுகளை பதிக்க வைத்திருந்த ஒருவர் கைது.
விருதுநகர் ஆமத்தூர் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் வெங்கடேஸ்வரன். இவர் ஆமத்தூர் விருதுநகர் சாலையில் ரோந்து பணியில், ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது தனியார் பட்டாசு கடை அருகே செட் அமைத்து ஜெயபிரகாஷ் என்பவர் எளிதில் தீப்பற்ற கூடிய பட்டாசுகளை எந்தவித அரசு அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.