தனியார் பட்டாசு கடையில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த நபர் கைது.
விருதுநகர் ஆமத்தூர் சாலையில் தனியார் பட்டாசு கடையின் பின்புறம் தகர செட் அமைத்து பட்டாசுகள் பதுக்கி வைத்திருப்பதாக ஆமத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது, அதன் அடிப்படையில் அங்கு ஆமத்தூர் காவல் நிலைய போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் அருண்குமரன் என்பவர் தனது இடத்தில் சட்டவிரோதமாக எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசுகளை பதுக்கி வைப்பது தெரியவந்தது. அருள்குமார் கைது செய்த காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.