விருதுநகர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இன்று(07. 10. 2023) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக, அறிஞர் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு, பொது மக்களிடையே உடற்தகுதி மேம்படுத்தும் பழக்கத்தினை ஊக்கப்படுத்தும் நோக்கில், நெடுந்தூர ஓட்டப் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலனலன் அவர்கள் துவக்கி வைத்தார். இப்போட்டி விருதுநகர் மாவட்ட மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள நுழைவு வாயில் இருந்து ஆரம்பித்து சூலக்கரை மேடு வரை சென்று மருத்துவ கல்லூரி வளாகத்தில் நிறைவு பெற்றது தலைமை அலுவலகத்தின் மூலம் வழங்கப்பட்ட பரிசுத் தொகையுடன், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் உயர்த்தி வழங்கப்பட்ட தொகையும் சேர்த்து முதல் பரிசு ரூ. 15, 000/-, 2வதுபரிசு ரூ. 10, 000/- மூன்றாம் பரிசு ரூ. 7, 000/- நான்காம் இடம் முதல் பத்தாம் இடம் வரை ரூ. 3000/- என வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. போட்டிகள் 17 வயது முதல் 25 வரை ஒரு பிரிவு மற்றும் 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஒரு பிரிவு என இருபாலருக்கு நடத்தப்பட்டது. இப்போட்டியில் 17 வயது முதல் 25 வயது பிரிவில் 101 ஆண்கள் மற்றும் 45 பெண்கள் என மொத்தம் 146 நபர்களும், 25 வயது மேற்பட்டவர் பிரிவில் 40 ஆண்கள் மற்றும் 11 பெண்கள் என மொத்தம் 48 நபர்களும் ஆக மொத்தம் 226 நபர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் தகுமரமணிமாறன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.