பிரபல நகைக் கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து

1056பார்த்தது
விருதுநகர் மதுரை சாலையில் பிரபல ( ஸ்ரீகுமரன் தங்கமாளிகை) நகைக்கடை இயங்கி வருகிறது. இந்த நகைக் கடையில் மாடியில் ஜெனரேட்டர் அறை மற்றும் அலுவலக அறை உள்ளது. இன்று பிற்பகலில் 1 மணியளவில் திடீரென தீப்பிடித்து அதிகமாக புகை வந்துள்ளது.

இதனைக் கண்ட அலுவலக அறையில் இருந்த பணியாளர்கள் அலறி அடித்துக் கொண்டு இறங்கினர். கீழ் தளத்தில் பணியாற்றிய 40க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கடையை விட்டு உடன் வெளியேறினர். தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடன் விரைந்து வந்து தீயை மேலும் பரவ விடாமல் தடுத்து அணைத்தனர். இது குறித்து கடை மேலாளர் பால் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்

தொடர்புடைய செய்தி