விருதுநகரில் அதிமுக கழக உறுப்பினர் உரிமை சீட்டு வழங்குவது குறித்தும் கழக வளர்ச்சி பணிகள் குறித்தும் நம்முடைய பகுதியில் ஆற்ற வேண்டிய மக்கள் நல பணிகள் குறித்தும் செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சர்ருமான ஆர்பி உதயகுமார் மற்றும் கழக சிறுபான்மை நலப்பிரிவு பொருளாளர் ஜான்மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் ஆர் பி உதயகுமார் பேசுகையில்
புரட்சித்தலைவர் துவக்கிய இந்த இயக்கத்தை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய இயக்கமாக உயர்த்தினார். தன் உழைப்பால் 50 ஆண்டுகால மக்கள் பணியாள் உயர்ந்து நிற்கும் எடப்பாடி யார் அவர்களின் கரத்தை வலுப்படுத்துவது தான் நம்முடைய ஒரே குறிக்கோள் 75 வயதான திமுக 50 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்துள்ளது 52 ஆண்டுகளான அதிமுக அதில் 32 ஆண்டுகள் அதிமுக ஆளுங்கட்சியாக இருந்துள்ளது. உதயநிதி ஸ்டாலினை தலைவர் பதவிக்கு திமுக வலுக்கட்டாயமாக திணிக்கிறது. கோழிக்குண்டு விளையாடும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்ததால் துரைமுருகன் மன வேதனையில் இருப்பதாக தெரிவித்தார்.