சட்டப்படி பதிவு செய்து குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம்

67பார்த்தது
சட்டப்படி பதிவு செய்து குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம்
இளைஞர் நீதி சட்டம் 2015, பிரிவு 56-ன்கீழ் தத்தெடுத்தல் திட்டத்தின் மூலம் குழந்தையை சட்டப்படி தத்தெடுத்து வளர்க்கலாம். அவ்வாறின்று சட்டத்திற்கு புறம்பாக குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது மற்றும் குழந்தையை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். இதுகுறித்து புகார் வரப்பெற்றால் சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், வழக்கு விசாரணையின்போது குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

தத்தெடுத்தல் திட்டத்தின்கீழ் பெற்றோர் இருவரும் இல்லாத குழந்தைகள் (Orphan), பெற்றோரால் புறக்கணிக்கப்பட்ட குழந்தைகள் (Abandoned), பெற்றோரால் வளர்க்க முடியாமல் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள் (Surrendered) மற்றும் உறவுமுறையில் குழந்தைகளை (Relative child adoption) தத்தெடுத்து வளர்க்கலாம். அவ்வாறு குழந்தையை தத்தெடுக்க விரும்பும் பெற்றோர் மத்திய தத்துவள ஆதார மையத்தின் www. cara. nic. in என்ற இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்யவேண்டும்.
அவ்விணையதளத்தில் பெற்றோருக்கான (Parents) என்ற பகுதியினை தெரிவு செய்து அதில் உள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து

தொடர்புடைய செய்தி