வெம்பக்கோட்டை அருகே வடகரை, மேட்டு வடகரை பகுதியில் நீர்வளத்தைப் பெருக்கவும், புவி வெப்பமயமாவதைத் தடுக்கவும், இளைஞர்கள் ஒருங்கிணைந்து சாலையின் இருபுறங்களிலும் ஊரணி கரையிலும் வேம்பு, புங்கை, புளி, அசோகா, மாங்கன்று, மகிழம்பூ, பனை விதை உள்ளிட்ட மரக்கன்றுகளை நடும் பணியை துவங்கியுள்ளனர். தொடர்ந்து மரக்கன்றுகளில் வேலி அமைத்து பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு பாராட்டு குவிகிறது.