விருதுநகர் மண்டலத்தில், செயல்பட்டு வரும் ஆர். ஏ. 430 இராஜபாளையம் வட்டார உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், ஆர். ஏ. 429 சிவகாசி வட்டார உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் வி. ஏ. 31 விருதுநகர் வட்டார உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் அந்தந்த வட்டார விவசாயிகள் படிவம் 16 மற்றும் 17 உடன் உரிய பங்குத் தொகை மற்றும் பிரவேச கட்டணம் செலுத்தி தனியரது ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல் மற்றும் 2 புகைப்படத்துடன் விண்ணப்பித்து உறுப்பினராக சேர்ந்து பயன் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் இது தொடர்பாக, ஏதேனும் சந்தேகம் இருப்பின் ஆர். ஏ. 430 இராஜபாளையம் வட்டார உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், முதன்மை நிர்வாக அலுவலர் தொலைபேசி எண் 97863-36396 மற்றும் செயலாட்சியர் 76959-53836 என்ற தொலைபேசி எண்ணிலும், ஆர். ஏ. 429 சிவகாசி வட்டார உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முதன்மை நிர்வாக அலுவலர் தொலைபேசி எண் 90425-19911 மற்றும் செயலாட்சியர் 94420-58126 என்ற தொலைபேசி எண்ணிலும், வி. ஏ. 31விருதுநகர் வட்டார உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முதன்மை நிர்வாக அலுவலர் தொலைபேசி எண் 98434-81831 மற்றும் செயலாட்சியர் 97151-09134 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன்தெரிவித்துள்ளார்.