*திருச்சுழி அருள்மிகு ஸ்ரீ திருமேனிநாதர் கோவிலில் மதுரை ஸ்ரீ கலாகேந்திரா ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் தேவாரப் பாடல்களுக்கு நடனமாடி உலக சாதனை முயற்சி*
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ திருமேனிநாதர் துணைமாலை அம்மன் கோவிலில் உலக சாதனை முயற்சி மேற்கொள்ளும் நோக்கில் மதுரை ஸ்ரீகலாகேந்திரா ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் நடனப்பள்ளி மாணவிகள் தேவாரப் பாடல்களுக்கு நடனமாடினர்.
மேலும் மதுரை ஸ்ரீ கலாகேந்திரா ஆர்ட்ஸ் அகாடமி இயக்குனர் செல்வி ஸ்ரீ அம்சினி தலைமையில் நடனப்பள்ளி மாணவிகள் பதிநான்கு பாண்டிய சிவஸ்தலங்களுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் 1000கி. மீ பயணம் செய்து உலகசாதனை மேற்கொள்ளும் முயற்சியாக பாண்டிய சிவஸ்தலங்களில் அந்தந்த கோவிலுக்கு உண்டான தேவாரப் பாடல்களுக்கு பரதநாட்டியம் ஆடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள அருள்மிகு ஸ்ரீதிருமேனிநாதர் கோவிலில் மதுரை ஸ்ரீ கலாகேந்திரா ஆர்ட்ஸ் அகாடமி நடனப்பள்ளி மாணவிகள் 12 பேர் தேவாரப் பாடல்களுக்கு நடனமாடி உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் மதுரை ஸ்ரீகலாகேந்திரா நடனப்பள்ளி மாணவிகள் ஏழாவது சிவஸ்தலமான திருச்சுழியில் உள்ள அருள்மிகு ஸ்ரீதிருமேனிநாதர் கோவிலில் தேவாரப் பாடல்களுக்கு பரதநாட்டியம் ஆடி உலக சாதனை முயற்சி மேற்கொண்டனர்.