அண்டார்டிகா மவுண்ட் வின்சன் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த பெண் மலை உச்சியிலிருந்து கீழே வர முடியாமல் தவிப்பதாக வீடியோ வெளியீடு.
விருதுநகர் மாவட்டம், ஜோயல்பட்டியைச் சேர்ந்தவர் 34 வயது பெண்மணி, முத்தமிழ்ச்செல்வி கடந்த 24ம் தேதி அண்டார்டிகா சிகரத்தின் 4, 892 மீட்டர் (16, 050 அடி) உயரமுள்ள மலையின் உச்சியை அடைந்து முதல் தமிழ் பெண்ணாக முத்தமிழ்செல்வி சாதனை படைத்தார்.
தற்போது அண்டார்டிகா மவுண்ட் வின்சன் சிகரத்தில் உள்ள அவர் மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டு கீழே வர முடியாமல் தவிப்பதாகவும் அங்கு உணவு உள்ளிட்ட தேவைகளை பெற முடியாமல் கடும் சிரமத்தை சந்திப்பதாகவும், கடுமையான சவால்களுக்கு மத்தியில் மலை உச்சியில் இருந்து கீழே இறங்கி வர முடியாமல் தவிப்பதாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.