*அண்டார்டிகா மவுண்ட் வின்சன் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் எவரெஸ்ட் முத்தமிழ் செல்வி*
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஜோகில்பட்டியைச் சேர்ந்த முத்தமிழ்செல்வி என்பவர் ஆசியகண்டத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி முதல் தமிழ் பெண் என்ற பெருமையை பெற்றார்.
அதனைத் தொடர்ந்து உலகத்தில் உள்ள 7 கண்டங்களில் உள்ள மலை உச்சியில் ஏறி சாதனை படைப்பதாக தெரிவித்திருந்த அவர் 6-வது முறையாக அண்டார்டிகா சிகரத்தின் 4, 892 மீட்டர் (16, 050 அடி) உயரமுள்ள மலையின் உச்சியை அடைந்து முதல் தமிழ் பெண்ணாக முத்தமிழ்செல்வி சாதனை படைத்துள்ளார்.