சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்தவர் மணிகண்டன், இவர் தனது வாகனத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு கருவன்குடி அருகே உள்ள அய்யனார் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ராஜேந்திர பிரசாத் என்பவர் ஓட்டி வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மணிகண்டன் ஒட்டிச் சென்ற வாகனம் சேதமடைந்த நிலையில், இந்த விபத்து குறித்து மணிகண்டன் அளித்த புகார் அடிப்படையில் ஏ முக்குலம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.