விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள மேற்கு காளையார் கரிசல்குளத்தைச் சேர்ந்த அழகர்சாமி மகன் பாலகிருஷ்ணன். இவர் விவசாயம் செய்து வருகிறார். தனது இடத்தை நான்கு மால் அளப்பதற்கு பாலகிருஷ்ணன் விஏஓ பாலமுரளி என்பவரிடம் பலமுறை புகார் மனு அளித்துள்ளார். இதற்கு பாலமுரளி 3 ஆயிரம் பணம் கொடுத்தால் மட்டுமே அளக்க வருவதாக பலமுறை அலைக்கழித்துள்ளார். இதனால் மனமுடைந்த விவசாயி பாலகிருஷ்ணன் விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இன்று காலையில் ஏ. டி. எஸ். பி ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பூமிநாதன் ஆகியோர் தலைமையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கரிசல்குளம் கிராமப் பகுதியில் மறைந்திருந்தனர். அப்போது விவசாயி பாலகிருஷ்ணன் விஏஓ பாலமுரளியிடம் இரசாயனம் தடவிய 500 ரூபாய் நோட்டுக்களை கொடுத்துள்ளார். அப்பொழுது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் வி. ஏ. ஓ பாலமுரளியை கையும் களவுமாக பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.