ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியை சார்ந்தவர் முத்துலட்சுமி (வயது 70). இவர் தனது மருமகள் ராணியுடன் அரியநாயகம் என்பவர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த பொழுது ஆட்டோ அருப்புக்கோட்டை சாயல்குடி சாலையில் ஒத்தக்கடை பேருந்து பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது அரியநாயகம் ஆட்டோவை அதிவேகமாக ஓட்டியதன் காரணமாக ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் இருவரும் காயம் அடைந்த நிலையில் இந்த விபத்து குறித்து முத்துலட்சுமி அளித்த புகார் அடிப்படையில் எம் ரெட்டியாபட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்